உலக அளவில் முன்னணி நிறுவனமான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் சி.இ.ஓவாக எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார். இவர் உலக பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் ஸ்ரீ லா வெங்கடரத்தினம் என்ற இந்தியாவை சேர்ந்த நபர் கார் உற்பத்தி நிறுவனத்தின் துணைத் தலைவராக வேலை பார்த்து வருகிறார். 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவர் தற்போது ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீலா வெங்கடரத்தினம் பதவியில் இருந்து விலகுகிறேன் என சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதோடு முன்னணி நிறுவனமான டெஸ்லா வில் பணிபுரிவதை மரியாதை ஆகவும் பெருமையாகவும் கருதினேன். ஆனால் எலான் மஸ்கிடம் வேலை பார்ப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல… மன அழுத்தம் அதிக அளவில் ஏற்படுகிறது என்றும் அந்த பதிவில் கூறியிருந்தார். மேலும் கடந்த சில நாட்களாக இந்த நிறுவனத்தில் இருந்து உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் விலகி வருகின்றனர் என்பது பேசப்பட்டு வருகிறது.