இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். இவர் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் தொடக்க வீரர் ஆவார். இவர் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் என அனைத்திலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர்.

ஆனால் ஷிகர் தவான் காயம் காரணமாக கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடவில்லை. இந்நிலையில் நீண்ட காலமாக ஓய்வில் இருந்த ஷிகர் தவான் தற்போது போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் ஆரம்பம் முதல் தொடக்கம் வரை கிரிக்கெட் போட்டிகள் குறித்து வீடியோ வெளியிட்டு தன் ஓய்வினை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இந்திய நாட்டிற்காக விளையாடியது மிகவும் பெருமையாக இருப்பதாக கூறியுள்ளார். அதன் பிறகு ஷிகர் தவான் இந்திய அணிக்காக 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் தொடர், 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.