அரசாங்க ஆதரவு திட்டமான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது தற்போது ஒவ்வொரு மூத்த குடிமகனுக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது. இந்த திட்டம் போஸ்ட் ஆபீஸால் வழங்கப்படுவதால் இதில் முதியவர்கள் நல்ல வட்டி விகிதங்களுடன் பாதுகாப்பான தொகையை பெற முடியும்.

இந்த சிறந்த திட்டத்தில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் ஒருவர் 5 ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு அவர் 60 வயது அல்லது அதனை தாண்டி இருக்க வேண்டும். இந்நிலையில் விருப்ப ஓய்வு அல்லது சிறப்பு VRS பெற்ற நபர்களும் SCSS திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 2014 ஆம் ஆண்டில் வட்டி விகிதம் 8.2% ஆக இருந்தது. 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் இந்தத் திட்டத்தினை தொடர விரும்பினால் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வசதியும் உள்ளது. இந்த திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் எந்தவொரு தபால் அலுவலகத்திலும் அல்லது நியமிக்கப்பட்ட வங்கி கிளைகளிலும் சென்று இதற்கான கணக்கை திறக்கலாம்.

அதோடு உங்கள் விவரங்கள், KYC ஆவணங்கள் போன்ற சான்றுகளுடன் ஒரு விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். குறிப்பாக இந்த திட்டத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய முடியும். கூடுதலான டெபாசிட் அனுமதிக்கப்படாது. அதே சமயம் அடிக்கடி தொகையை திரும்பப் பெற இயலாது.

இந்த சலுகைகள் பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிசிஐ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் இந்த திட்டத்திற்கான சலுகைகளை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.