கொல்கத்தாவில் சத்ரன் அவென்யூ என்ற பகுதியில் உள்ள சாலையில் பெங்காலி நடிகை பாயல் முகர்ஜி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் திடீரென்று எதிர்பாராத விதமாக எதிரே வந்த பைக்கின் மீது லேசாக மோதியது. இதில் கோபமடைந்த பைக் ஓட்டுநர் பாயல் காரை தாக்கினார் உடனடியாக பாயில் காருக்குள்ளிருந்து பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீம் செய்ய தொடங்கினார்.இதைத்தொடர்ந்து அந்த பைக் ஓட்டி பாயலை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதனால் பாயல் யாராவது உதவிக்கு வரும்படி கூச்சலிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பைக் ஓட்டுனரை கைது செய்தனர். அதன் பின் பாயல் தன்னை அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசினார் என்று குற்றம் சாட்டினார். அதற்கு அந்த பைக் ஓட்டுநர் தனது பைக் மீது மோதியதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

“>