தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியதிலிருந்து அதுதான் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் , நபர் ஒருவர் விஜயை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக கூறி பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய்க்காக இரண்டு அரசியல் கதைகள் எழுதி இருப்பதாகவும்,

2 கதையும் நல்ல கதை 2000 கோடி வசூல் பெறும் இந்த 2000 கோடி ரூபாயை 2026 தேர்தலில் விஜய் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பிக்கையோடு பேசி உள்ளார். இவர் பேசியதை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சிலர் உண்மையில் அவருக்கு திறமை இருந்திருந்தால் அவர் குறும்படங்கள் எடுக்க முயற்சி செய்திருக்கலாம், அல்லது அது சம்பந்தமாக வேறு ஏதேனும் பணிகளில் ஈடுபட்டு இருக்கலாம் நேரடியாக விஜய் அவர்களை வைத்து தான் இயக்குவேன் என்று வெளிப்படையாக அவர் பேசுவது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கத்தான் என நெட்டிசன்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.