
ஜார்க்கண்ட் மாநிலம், கோடெர்மா மாவட்டத்தில் 15 வயது சிறுமி தனது பெற்றோரின் பேராசைக்காக உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார். பணத்திற்காக தங்கள் மகளின் எதிர்காலத்தை அடகு வைத்த பெற்றோரின் செயல் கண்டிக்கத்தக்கது என பலரும் இது குறித்து பரவலாக அப்பகுதியில் பேசி வந்தனர்.
இந்தச் சிறுமி ஒரு பள்ளி மாணவி. அவளது எதிர்காலம் படிப்பு மற்றும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைப்பதாக இருக்க வேண்டும். ஆனால், அவளது பெற்றோர் அவளது கனவுகளை நசுக்கி, அவளை ஒரு திருமணப் பொருளாக மாற்றியிருக்கிறார்கள். மேலும் அச்சிறுமியை உத்திரபிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல இருந்த நிலையில் இது குறித்து தெரிந்து கொண்ட போலீசார் அங்கு சென்று அச்சிறுமியை காப்பாற்றினர். மேலும், இதற்கு காரணமான அச்சிறுமியின் பெற்றோர்களை குழந்தை திருமணம் செய்து வைத்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருமணம் செய்த இளைஞன் தப்பி செல்லவே வழக்கு பதிவு செய்து தப்பி சென்றவரை தேடி வருகின்றனர்.