இந்தூரில் ரிஷி பேலஸ் காலனியில் வசித்து வந்த சுபாஷ் ராய்புரே என்ற 26 வயது நபர், ரொட்டி தயார் செய்யும் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சம்பவ நாளன்று சுபாஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

தலைக்கேறிய போதையில் இருந்த அவர் பாத்ரூம் கிளீனரை தவறுதலாக எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த குடுப்பதினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று ,அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்தனர். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் , சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.