எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனைத்து தகவல்களையும் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வதற்கு ஆன்லைன் மூலம் பல சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் உங்கள் எஸ்பிஐ அக்கவுண்டில் பேலன்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வங்கி தற்போது மிஸ்டு கால் மூலம் அல்லது மெசேஜ் மூலம் தகவல்களை பகிர்ந்து வருகிறது. அது எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்.

முதலில் மிஸ்டு கால் என்ற வங்கி சேவையை பயன்படுத்தி உங்கள் அக்கவுண்டில் பேலன்ஸ் விவரங்களை சரி பார்ப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

1. உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து மெசேஜ் அப்ளிகேஷனை ஓபன் செய்யவும்.
2. ரிஜிஸ்ட்ரேஷன் அக்கௌன்ட் என்னை டைப் செய்யவும்.
3. பின்பு 09234 88888 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.
இதன் மூலம் நீங்கள் எஸ்பிஐ மிஸ்டு கால் வங்கி சேவையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் வங்கி உங்களுக்கு 2 விருப்பங்களில் சேவை வழங்கி வருகிறது. அதாவது எஸ்பிஐ பேலன்ஸ் மற்றும் மினி ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை சரிபார்க்க கட்டணமில்லா இரண்டு எண்களை வழங்கி வருகிறது.

1. 92237 66666 என்ற எண்ணுக்கு கால் செய்து எஸ்பிஐ பேலன்ஸை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
2. 92238 66666 இதன்மூலம் உங்கள் எஸ்பிஐ அக்கவுண்டின் ஸ்டேட்மெண்டை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

வாட்ஸ் அப் மூலம் எஸ்பிஐ பேலன்ஸை எப்படி சரி பார்ப்பது என்பதை பார்க்கலாம்.

1. உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் 90226 90226 என்ற எண்ணை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
2. உங்கள் ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து இந்த எண்ணை தேடவும்.
3. இந்த எண்ணுக்குரிய சேட் பாக்ஸில் ஹாய் என டைப் செய்து புதிய சேட்டை தொடங்கவும்.
4. பின் பிராம்ப்ட்டில் இருந்து கெட் பேலன்ஸ் என்பதை கிளிக் செய்யவும்.
இவ்வாறு செய்தால் உங்களது எஸ்பிஐ பேலன்ஸ் பற்றிய தகவலை நீங்கள் எளிதில் பெறலாம்.

எஸ்எம்எஸ் மூலம் எஸ்பிஐ பேலன்ஸை எப்படி சரி பார்ப்பது என்பதை பார்ப்போம்.

1. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் இருந்து மெசேஜ் அப்ளிகேஷனை ஓபன் செய்யவும்.
2. பேலன்ஸ் என டைப் செய்து 92237 66666 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.
இவ்வாறு செய்தால் எஸ்எம்எஸ் மூலம் நீங்கள் உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்.

யோனோ ஆப் மூலம் எஸ்பிஐ பேலன்ஸை எப்படி சரி பார்ப்பது என்பதை பார்ப்போம்.

1. உங்கள் மொபைலில் யோனோ ஆப்பை இன்ஸ்டால் செய்யவும்.
2. ஆப் ஓபன் செய்த பின்பு யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை போட்டு அக்கவுண்ட்டை லாகின் செய்யவும்.
3. ஆப்பிள் உங்கள் பின் அல்லது பயோமெட்ரிக்சை முதல் முறையாக அமைக்க வழிமுறைகளை பின்பற்றவும்.
4. இவை அனைத்தும் முடிந்த பின்பு ஹோம் ஸ்கிரீனில் வியூ பேலன்ஸ் அப்ளிகேஷனை காண்பீர்கள் அதை டாப் செய்தவுடன் உங்கள் எஸ்பிஐ அக்கவுண்ட் பேலன்ஸ் தெரியும்.
இவ்வாறு யோனோ ஆப் மூலம் நீங்கள் உங்களது எஸ்பிஐ பேலன்ஸை சரி பார்க்கலாம்.

நெட் பேங்கிங் மூலம் எஸ்பிஐ பேலன்ஸை எப்படி சரி பார்ப்பது என்பதை பார்ப்போம்.

1. உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பிரவுசரில் என்ற இனிய தளத்தில் லாகின் செய்யவும்.
2. அதில் உங்களது அக்கவுண்ட் டீடைல் என்பதை கிளிக் செய்து உங்களது அக்கவுண்டிங் பேலன்ஸை சரி பார்த்துக் கொள்ளலாம்.