பிரபல யூட்யூபரான சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி குறித்து பேசியதற்கு கைது செய்யப்பட்டார். அதோடு எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை குறித்து நாம் தமிழர் கட்சியின் வலைத்தளம் உள்ளிட்டவற்றில் விமர்சித்தனர்.

இது தொடர்பாக ஆபாச கருத்து பதிவிட்ட விவகாரத்தில் பள்ளி மாணவன் ஒருவர் சிக்கினார். இந்நிலையில் மாணவன் அவரது தாயாருடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்பு அங்கு பெண் காவலர் மூலம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது தான் செய்த தவறை அந்த மாணவன் ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் இருந்து செல்போனை வாங்கி விடுவதாக மாணவனின் தாய் கூறினார். இதற்கு பதிலளித்த எஸ்.பி போனை வாங்குவது மட்டும் தீர்வல்ல மனதளவில் மாற வேண்டும்.

இதையடுத்து மாணவனுக்கு ஒரு சகோதரி இருப்பதையும், படிக்கும் பள்ளியில் மாணவிகள் இருப்பதையும் எடுத்து கூறினார். அதன் பிறகு அந்த மாணவனை அங்கிருந்து அனுப்பி வைத்தார். ஆபாச கூட்டத்தின் தாக்குதலால் பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது என்று எஸ்.பி கூறினார்.