ரயில் தண்டவாளத்தில் ஒருவர் தூங்கும் காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து கையில் குடையை பிடித்து கொண்டே தூங்குகிறார். அப்போது அந்த தண்டவாள பாதையின் வழியாக ரயிலை ஓட்டி வந்த லோகோ பைலட் அந்த நபர் படுத்து இருப்பதை பார்த்து சுதாரித்துக் கொண்டார். உடனே அவர் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்திவிட்டார்.

இதனையடுத்து கீழே இறங்கி வந்த லோகோ பைலட் அவரை எழுப்பி விட்டு அந்த இடத்தில் இருந்து கிளப்பி விட்ட பிறகு ரயிலை இயக்கி சென்றார். வீடியோவை வைத்து பார்க்கும் போது அது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்ததாக தெரிகிறது. ஆனால் உண்மையாக இந்த சம்பவம் எங்கு நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. அந்த வீடியோவை பார்த்த பலரும் மது போதையில் அவர் உறங்கியிருப்பார் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிலர் சரியான நேரத்தில் லோகோ பைலட் ரயிலை நிறுத்தி அவரது உயிரை காப்பாற்றி விட்டதாக பதிவிட்டுள்ளனர்.