
எஸ் பி அருண் குமார் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும் இடையே சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. அது குறித்து தற்போது சீமான் அவர்கள் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் அதில், நீங்கள் ஆட்சியாளர்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தால், வேறு வழியில் மகிழ்வித்துக் கொள்ளுங்கள்.
எங்களை சீண்டி தான் மகிழ்விக்க வேண்டும் என்றால் நான் எந்த எல்லைக்கும் செல்வேன். சிறைக்கு செல்வதோ, வழக்கு சந்திப்பதோ , நீதிமன்றத்தில் நிற்பதோ அது பற்றியெல்லாம் கவலை இல்லை. எனக்கு இல்லாத வழக்கா? உங்களுக்கு வேண்டுமென்றால் மோதிக் கொள்ளுங்கள்.
வேண்டாம் என்றால் விட்டுப் போங்க. நான் சமரசத்திற்கு வரமாட்டேன். பயப்படுவது சமரசத்திற்கு நிற்பது அஞ்சுவதும் அடிபணிவதும் எங்கள் பரம்பரைக்கே கிடையாது. என்ன வேணாலும் செஞ்சுக்கோங்க. ஆனால் அவர் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளான இந்த ஈனச் செயல்களை செய்யவில்லை.
என் பிள்ளைகள் செய்ய மாட்டார்கள். செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், செய்ய மாட்டார்கள். ஏனென்றால் நான் அவர்களை விட மாட்டேன் என்று அவர்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.