கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு பேர் போன ஷாகிப் அல் ஹசன், எப்போதும் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவும், அம்பையர்களுக்கு எதிராகவும் அவர் செய்யும் மோசடி செயல்களால் இணையதளத்தில் வைரலாக பேசப்படும். அதேபோன்று கடந்த 2021-ம் ஆண்டு நடந்த டாக்கா பிரீமியம் லீக் போட்டியில், நடுவரின் முடிவில் அதிருப்தியடைந்த அவர் கால்களால் ஸ்டம்பை உதைத்தார். அதுமட்டுமின்றி ஸ்டம்புகளை பிடிங்கி பிட்ச்சில் அடித்தார். அப்போதும் கடுமையான விமர்சனங்களை பெற்றார். இதைத்தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு வங்கதேச பிரீமியர் டி20 போட்டியில் அம்பையர் ஒயிடு கொடுத்ததால் ‘ஹேய்’ ,’ஹேய்’ என சத்தமிட்டு சண்டைக்கு சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் டெஸ்ட் மேட்ச் நடைபெற்றது. அந்த போட்டியில் பாகிஸ்தானும்,வங்கதேச அணியும் மோதிக்கொண்டது.  அதில் கடந்த 21-ம் தேதி  நடந்த போட்டியில்  10 விக்கெட்டுகளை எடுத்து வங்கதேச அணி வெற்றி பெற்றது. இந்த வரலாற்று வெற்றியில் 3 விக்கெடுகள் எடுத்து மிகப்பெரிய பங்காற்றினார் ஷாகிப் அல் ஹசன். இருப்பினும் அவருடைய ஆக்ரோஷமான செயல்களால் விமர்சனத்தை பெற்றார். அதாவது இவர் 33-வது ஓவரின் 2-வது பந்தை வீச தயாராக இருந்தார். ஆனால் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் தயாராகாததால் கோபத்தில் பந்தை முகத்திற்கு நேராக எறிந்தார். அத்துடன் அடுத்த பந்தை சரியாக வீசாததால் கோபத்தில் தனக்குத்தானே கத்திக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.