
வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் தான் பிராத்வைட். 88 சர்வதேச போட்டிகளில் விளையாடிய இவர் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்து 75 விக்கெட் வீழ்த்தி பிரபல கிரிக்கெட்டராக திகழ்ந்துள்ளார். ஆனால் சமீப காலமாக இவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.
அதற்கேற்றார் போல் பிராத்வைட் நடந்து கொள்கிறார். நாளுக்கு நாள் அவரது திறமை குறைந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து பிராத்வைட்டை விலக்கியது. இதனால் உள்ளூர் லீக் போட்டிகளில் மட்டும் இவர் விளையாடி வருகிறார்.
— Cric guy (@Cricguy88) August 25, 2024
இந்நிலையில் கேமன் தீவில் நடைபெற்று வரும் மேக்ஸ் 60 கரீபியன் 10 தொடரில் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடும் பிராத்வைட் 7 ரன்கள் எடுத்து டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். அப்போது மைதானத்தில் இருந்து அவர் வெளியில் வரும்போது தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழற்றி பந்தை சிக்ஸர் அடிப்பது போன்று அடித்து பறக்கவிட்டுள்ளார்.
அதோடு கையில் வைத்திருந்த கிரிக்கெட் பேட்டை தூக்கி வீசிவிட்டு கோபமாக சென்று அமர்ந்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.