
பீகார் மாநிலம் முசாபர் நகரில் காஜல் மற்றும் அவரது கணவரும் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு மிஸ்தி(3) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் காஜல் தனது கணவனைப் பிரிந்து காதலுடன் வாழ ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது காதலன், காதலியின் குழந்தையை கூட அழைத்து வர ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் காஜல் க்ரைம் பாட்ரோல் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குற்றங்களின் பின்னணி தொடர்பான நிகழ்ச்சியை பார்த்து தனது குழந்தையின் கழுத்தை அறுத்து சூட்கேஸில் வைத்து அப்பகுதியில் உள்ள குப்பையில் வீசியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் கிடந்த சிவப்பு நிற சூட்டை கண்டடுத்தனர். அதில் குழந்தையின் சடலம் இருந்தது.
அதன் பிறகு குழந்தை யார் என்பது கண்டறியப்பட்டு, அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் தரை மற்றும் சிங்கில் ரத்தக்கரை இருந்ததை கண்டறிந்தனர். ஆனால் அங்கு காஜல் இல்லை, அவரது தந்தைக்கு போன் செய்த போது அவர் தனது உறவினர் வீட்டில் இருப்பதாக தகவல் தெரிவித்தார். அதன் பின் இதுகுறித்து மிஸ்தியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் காஜலின் செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்தனர். பின்பு அங்கு சென்று பார்த்தபோது காஜல் தனது காதலனுடன் வசித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேல் கண்ட விபரங்கள் தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காஜலை கைது செய்தனர். மேலும் காதலனுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update:
Muzaffarpur Police arrested the absconding Mother Kajal Kumari from the house of her BF for the murder of her own 3 year old daughter. #NariShakti Kajal Kumari confessed killing her daughter and she not committed the crime in anger or rage but instead she executed it… https://t.co/WPhTILk1Kq pic.twitter.com/oNM5jJPHeK— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) August 27, 2024
“>