
தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சென்னையிலிருந்து விமானத்தில் அமெரிக்கா புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அவரை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது அமெரிக்க வாழ் இந்தியர்கள் முதல்வர் ஸ்டாலினை நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் அவருக்கு ஆரத்தி எடுத்தனர்.
பிரபல நடிகர் நெப்போலியன் முதல்வர் ஸ்டாலினை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தமிழக முதல்வர் ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் கிகாகோ ஆகிய பகுதிகளுக்கு செல்ல இருக்கிறார். அங்கு முதலீடாளர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களை முதல்வர் சந்திக்கிறார். இந்நிலையில் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை பெருமைப்படுத்தும் விதமாக Time Square-ல் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படம் வந்துள்ளது. அதோடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் டிஆர்பி ராஜா ஆகியோர்களின் புகைப்படம் இருக்கிறது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.