திருநெல்வேலி மாவட்டத்தில் பழமையான கோவில் சிலைகள் விற்கப்பட்டதாக கூறி போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காதர் பாட்ஷா கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தன்னை பழி வாங்கும் நோக்கத்தில் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக அப்போது பணியில் இருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது ஹை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிபிஐ விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வேண்டும் என பொன் மாணிக்கவேல் மனு கொடுத்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் சிபிஐ தரப்பில் முன் ஜாமீன் வழங்க கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தற்போது பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் 4 வாரங்களுக்கு தொடர்ந்து சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது..