சமூக வலைதளத்தில் வெளியான x பதிவு ஒன்று நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜே என்ற எக்ஸ் தளத்தில் தான் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அந்த நபர் 2022 ஆம் ஆண்டு பிரஷர் குக்கர் ஒன்றை அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த பிரஷர் குக்கர் இரண்டு தினங்களுக்கு முன்பு அதாவது 2024 ஆம் வருடம் ஆகஸ்ட் 29 அன்று அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

இதனை ஜே எக்ஸ் தளத்தில் இரண்டு வருடம் கழித்து எனது பிரஷர் குக்கரை டெலிவரி செய்ததற்கு அமேசானுக்கு நன்றி என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வரை 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் நெட்டிசன்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பதிவிட்டு வருகின்றனர்.

https://x.com/thetrickytrade/status/1829065532282200454