தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு ரேஷன் கார்டுகள் மூலமாக மாநில அரசின் திட்டங்களும் மக்களுக்கு சென்றடைகிறது. இந்நிலையில் மாதத்தின் கடைசி நாள் பெரும்பாலான பொருள்கள் ரேஷன் கடைகளில் கிடைப்பது கிடையாது. ஆனால் இன்றைய தினம் அனைத்து விதமான பொருள்களும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி மாதத்தின் கடைசி நாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்திய ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்களை பெறாதவர்கள் இன்று வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.