
கோவை ஆலந்துறை வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த பரணிதரன் (24) என்பவர் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவிக்கு நேற்று முன்தினம் இரண்டாவது குழந்தை பிறந்ததால், இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் கொண்டாட மது அருந்தச் சென்றார். இந்த நேரத்தில், அருகிலிருந்த தோட்டத்தில் பராமரிப்பின்றி கிடந்த ஒரு கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்த போது அவரது நண்பர்கள் அருகில் இருந்ததால், உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பரணிதரனை உயிருடன் மீட்க முடியவில்லை. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.