
நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு என்றால் அது தமிழ்நாடு தான் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை என்பதற்கு சான்றாக தற்போது ஒரு சம்பவம் வெளியாகி உள்ளது. அதாவது ஹிந்தி பிரச்சார சபா வாயிலாக ஹிந்தி தேர்வு எழுதியவர்களில் தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. மத்திய அரசு ஹிந்தியை அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தை கூடுதல் அளவில் மொழியாகவும் வைத்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தியை சிறுவயதிலிருந்தே கற்கும் விதமாக புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் நிதி கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்த ஹிந்தி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 3,54,655 பேர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் தென் மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிக மாணவர்கள் இந்தி தேர்வில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் ஹிந்தியை எதிர்க்கும் மாநிலம் தமிழகம் இல்லை எனவும் ஹிந்தி திணிப்புக்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதும் தெளிவாக தெரிந்துள்ளது.