
நாட்டில் இன்று முதல் அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரப்போகும் புதிய மாற்றங்கள் குறித்து பார்ப்போம். அதன்படி இன்று காலை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 38 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு 1855 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதேசமயம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதன் பிறகு இந்திய தொலைத்தொடர்பு ஆணையமான டிராய் ஓடிடி மற்றும் URL கொண்ட எஸ்எம்எஸ்கள் மூலம் நடைபெறும் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மொபைல் நிறுவனங்களில் முறையாக பதிவு செய்ய வேண்டும் என அறிவித்திருந்தது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த இன்று முதல் வங்கிகளில் இருந்து அனுப்பப்படும் மெசேஜ்கள் வாடிக்கையாளர்களை சென்றடையாது.
அதன் பிறகு ஹெச்டிஎஃப்சி மற்றும் IDFC பேங்க் கிரெடிட் கார்டுகளில் வழங்கப்படும் ரிவார்டுகளில் இன்று முதல் புதிய மாற்றங்கள் அமலாகிறது. இந்த புதிய மாற்றங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இனி மாதத்திற்கு 2000 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். அதே சமயத்தில் ரூபே கார்டுகளின் யுபிஐ பண பரிவர்த்தனைக்கு வெகுமதிகள் மற்றும் பிற பலன்களை வழங்க வேண்டும் என NPCI அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி இலவசமாக ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் புதிய கட்டண விதிமுறை அமலுக்கு வருகிறது. ஜிஎஸ்டி செலுத்துவோர் செல்லுபடியாகும் வங்கி விவரங்களை வழங்காத நிலையில் அவர்கள் இன்று முதல் GSTR-1 தாக்கல் செய்ய முடியாது. IDFC first Bank பில் செலுத்துவதற்கான காலக்கெடு 18 நாட்களில் இருந்து 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.