வருகிற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் போட்டியிடும் முன்னால் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த ஜூலை 13-ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் டிரம்பின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

அதன் பிறகு அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் உள்ள ஜான்ஸ்டவுன் பகுதியில் பேரணியில் ஈடுபட்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் தடையை மீறி டிரம்பை நெருங்க முயற்சித்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில் தாடியுடன் கூலிங் கிளாஸ் அணிந்த நபர் ஒருவர் பொதுமக்கள் தடையை மீறி செய்தியாளர்கள் இருந்த பகுதிக்குள் நுழைந்து மேடையில் ஏற முயற்சித்தார்.

அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு கூட்டத்தில் இருந்த மற்றொரு நபரையும் கைவிளங்கிட்டு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவருக்கும்  தொடர்பு உள்ளதாக தெரியவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.