
சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கார் பந்தயம் நடத்துவதன் மூலம் முதலீடு வரும் என்றால் எதற்காக அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும். இவ்வளவு எதிர்ப்புகள் வந்த பிறகும் அதிகாரத் திமிரில் கார் ரேஸ் நடத்துகிறார்கள். நான் தனி நாடு கேட்கவில்லை. இந்த நாடே என்னுடையது.
தமிழர்கள் தெற்காசியா முழுமைக்கும் பரவி வாழ்ந்தவர்கள். அப்படி எனில் இந்த நாடு என்னுடையதுதான். என்னை பார்த்து பாசிசவாதி மற்றும் பிரிவினைவாதி என்று கூறும் போது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது. இந்தியா என்னுடைய நாடு, பாரத நாடே தமிழர் உடையது என்று இனிவரும் தலைமுறையினருக்கு சொல்ல வேண்டும். இந்தியாவின் தொன்மையான மொழி தமிழ் தான். மேலும் தொன்மையான மொழி தமிழ் என்று பிரதமர் மோடி கூறும் நிலையில் புதிய நாடாளுமன்றத்தில் ஏன் தமிழ் இல்லை என்று கேள்வி எழுப்பினார்.