
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். இவர் கடந்த 2000 முதல் 2017 ஆம் ஆண்டு கால கட்டங்களில் இந்திய அணிக்காக சுமார் 402 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். நாட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக யுவராஜ் சிங் போற்றப்படும் நிலையில் அவரின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் அவர் ஆட்சிய பங்களிப்பு அளவில்லாதது.
இந்நிலையில் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் தன்னுடைய மகனுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் எம்.எஸ். தோனி தான் என்று தற்போது பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். அதோடு புற்றுநோயினால் போராடி நாட்டுக்காக விளையாடி கோப்பையை யுவராஜ் சிங் வென்று கொடுத்துள்ளார். மேலும் இதனால் யுவராஜ் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.