பாஜகவை சேர்ந்த ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் முகலாய மன்னர் அக்பரை குறித்து பெருமையாக விவரிக்கும் பாட புத்தகங்கள் தீயிலிட்டு எரிக்கப்படும் என பேசி உள்ளார். உதய்பூர் மோகன்லால் சுகாதியா பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர் அக்பரை அரசர் மஹாராணா பிரதாப்புடன் ஒப்பிட்டு பேசுவது ராஜபுத்திர அரச வம்சத்துக்கும் ராஜஸ்தானின் பெருமைக்கும் விளைக்கும் மிகப்பெரிய அவமானம். மஹாராணா பிரதாப் மக்களின் பாதுகாவலராக இருந்தவர். ஆனால் அக்பரோ தனது சொந்த நன்மைக்காக மக்களை கொலை செய்தவர்.

அவரை சிறந்தவர் என்று பள்ளி பாட புத்தகத்தில் பெருமையாக குறிப்பிடுபவர்களை விட பெரிய எதிரி மேவார் ராஜ்ஜியத்திற்கும், ராஜஸ்தானுக்கும் இருக்கவே முடியாது. எல்லா வகுப்பு பாடப் புத்தகங்களையும் நாங்கள் ஆய்வு செய்தோம். இதுவரை அக்பரை சிறந்தவர் என பாடப் புத்தகத்தில் குறிப்பிடவில்லை. ஒருவேளை அப்படி இருந்தால் அந்த புத்தகங்களை தீயில் இட்டு எரிப்போம். என கூறியுள்ளார். மேவார் ராஜ்ஜியத்தின் போற்றப்படும் அரசர்களில் ஒருவர் மகாராண பிரதாப் சிங். 1576 ஆம் ஆண்டு நடந்த ஹால்திகட்டி போரில் முகலாய சாம்ராஜ்யத்திற்கு எதிராக போர் செய்தவர் என மதன் பேசியுள்ளார்.