செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரினசேர்க்கையாளர்கள் இருவர் வாழ்ந்து வந்தனர். இந்த வாலிபர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில் அவர்களுக்கு அதில் டேட்டிங் அழைப்பு வந்துள்ளது. அவர்களை லோகநாதன் என்பவர் அழைத்துள்ளார். இதனை நம்பி இரு வாலிபர்களும் மறைமலைநகருக்கு சென்றனர்.

அங்குள்ள ஒரு பாழடைந்த பங்களாவுக்கு லோகநாதன் அவர்களை வரவழைத்துள்ளார். அங்கு லோகநாதன் 3 சிறுவர்களுடன் சேர்ந்து அவர்களை கத்தியை காட்டி மிரட்டி தங்க மோதிரத்தை பறித்துள்ளார். அதோடு ஜிபே மூலமாக 28 ஆயிரம் பணத்தையும் பறித்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் லோகநாதன் 3 சிறுவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.