கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை ஒட்டி நேற்று, திருச்சியில் அவரது சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், லால்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணி பற்றி பேசியது தவறாக திருத்தி போட்டு விட்டனர். முதல்வர் எங்கள் கூட்டணியை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.

கருணாநிதிக்கு பின்பு மு.க.ஸ்டாலின் ஆட்சியை தொடர்ச்சியாக அடுத்த முறையும் கொண்டு வர வேண்டும் என்று எண்ணத்தில் கூறியதே  தவிர கூட்டணியை யாரும் விட்டுக்கொடுத்து போக வேண்டியது இல்லை. எங்கள் கூட்டணி மிகவும் அருமையான கூட்டணி. கூட்டணி கட்சித் தலைவர்கள் எங்களிடம் அருமையாக பழகி கொண்டு வருகிறார்கள். வேண்டுமென்றே “நான் பேசியதை மாற்றிப் போட்டுவிட்டனர்” என்று தெரிவித்தார்.