
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகில் உள்ள பெல் குடியிருப்பில் சுரேந்தர்(40), சங்கீதா(37) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். சுரேந்தர் பெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தனிஷா(11) என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் சுரேந்தர் கடந்த 1-ம் தேதி அன்று தனியார் உணவகத்தில் பார்பிக்யூ சிக்கன் மற்றும் சிக்கன் ப்ரைட் ரைஸ் பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் சாப்பிட்டுள்ளார். இதனால் மறுநாள் காலையில் தனுஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றார். அதன் பிறகு அன்று மதியமே சங்கீதாவுக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அன்று இரவே சுரேந்திருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவர் கூறியதாவது, உடம்பில் நீர்ச்சத்து குறைந்துள்ளதால் அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று கூறினர். மூவருக்கும் ஒவ்வாமையால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மருவத்தூர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தனிஷாவுக்கு விட்டு விட்டு காய்ச்சல் வந்ததால், அவரது உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். சுரேந்தருக்கும், சங்கீதாவுக்கும் 5 நாட்கள் தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.