மத்திய பிரதேசம் ரத்லம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் சிறுமியின் தலைமுடியை பள்ளியின் ஆசிரியர் பீர் சிங் மேதா என்பவர் வெட்டியுள்ளார். அப்போது அந்த ஆசிரியர் மது போதையில் இருந்துள்ளார். உடனடியாக அந்த சிறுமி அலறியுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஆசிரியரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் வாக்குமூலம் மற்றும் முதல் கட்ட விசாரணை அடிப்படையில் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய உதவி ஆணையர் உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“>