தமிழகத்தில் அரசு பேருந்துகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தமிழக பாஜக எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளது. அதோடு தமிழக முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதாவது ஒரு அரசு பேருந்தில் படிக்கட்டு இல்லாமல் இருக்கிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் உட்பட பயணிகள் அச்சத்துடன் பேருந்தில் இருந்து குதித்து இறங்குகிறார்கள்.

இது தொடர்பான காட்சியை பதிவு செய்துள்ள தமிழக பாஜக கோபாலபுரம் வாரிசுகள் மட்டும் செல்வ செழிப்பாக இருந்தால் போதும், சாமானிய மக்கள் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை என கொஞ்சம் கூட கவலை இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். அரசு பேருந்துகளின் நிலை இவ்வளவு மோசமாக இருக்கும் போது கார் ரேஸ் தேவைதானா.? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் தமிழக பாஜகவின் இந்த பதிவு எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது.