டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் திடீரென பழுதாகி பாதி வழியில் நின்றது. பல மணி நேரம் போராடியும் தொழில்நுட்ப வல்லுனர்களால் ரயிலில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய இயலவில்லை. இதனால் சரக்கு ரயில் இன்ஜின் வரவழைக்கப்பட்டு வந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்றனர்.

பின்னர் எடவா ரயில் நிலையத்தில் வைத்து ரயிலில் பயணித்த பயணிகளை 3 ரயில்களில் மாற்றி விட்டனர். இதனால் ரயிலில் பயணித்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.