
ஹைதராபாத் தூல்பத் பகுதியை சேர்ந்த நேஹா பாய் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது எதேச்சையாக நேஹா பாயின் கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மஞ்சள் பொடி பாக்கெட்டை எடுத்துப் பார்த்தபோது வித்தியாசமாக இருந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதனுள் 10 கிராம் அளவில் கஞ்சா இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேஹா பாயை கைது செய்து விசாரித்ததில் 10 கிராம் கஞ்சாவை 600 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.