வியட்நாமை கடந்த சனிக்கிழமை யாகி புயல் தாக்கியது. இந்த புயல் முன்னதாக பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் வியட்நாமிலும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது‌. இந்த புயல் மணிக்கு 149 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது. இதனால் கனமழை பெய்த நிலையில் கடலோரப் பகுதிகள் பாதிக்கப்பட்டது. அதோடு கடந்த 30 வருடங்களில் வியட்நாமை தாக்கிய மிகப்பெரிய புயல் என்று இது கூறப்படும் நிலையில், இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதோடு 250 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் தற்போது புயலினால் பாலம் ஒன்று இடிந்து விழும்  வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மிதமான வேகத்தில் லாரி ஒன்று பாலத்தின் மீது சென்றது. அப்போது கண்ணிமைக்கும் நொடியில் மள மளவென அந்த பாலம் இடிந்து கீழே விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்திருக்கலாம். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்த நிலையில் பாலம் இடிந்து விழுவதை பார்த்து அவர் உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.