கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கு கீழே குறைந்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் தற்போது 69.51 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதால், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசுக்கு கணிசமான லாபம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு, கச்சா எண்ணெய் விலை குறைவின் நன்மையை பொதுமக்களுக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுநல அமைப்புகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.