
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கஸ்பா பகுதியில் ஓடும் பேருந்தில் இளம்பண்ணுக்கு சக பயணி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிய வருகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டவுடன் அந்த நபர் தப்பியோட முயற்சித்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்து தாக்கியுள்ளனர். மேலும் கஸ்பா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த இளம் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை காவல்துறையினரிடம் கூறி புகார் அளித்தார். அடிப்படையில் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர்.
மேலும் அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.