பிரபல பின்னணி பாடகர் மனோ. இவர் தமிழ் உட்பட பல மொழிகளில் ஏராளமான மொழிகளில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு சாகிர் மற்றும் ரபிக் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் சிறுவன் ஒருவனை தாக்கியுள்ளனர். அதாவது பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் சிறுவன் கால்பந்து விளையாடிவிட்டு வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சாப்பிடுவதற்காக வந்துள்ளான். அப்போது மது போதையில் இருந்த சாகிர், ரபிக் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து சிறுவனை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததால் மனோவின் மகன்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களுடைய நண்பர்கள் 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.