ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சொலான் பகுதியிலுள்ள பகர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சீனியர் மாணவர்கள் மூன்று பேர் ஜூனியர் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஜூனியர் மாணவரை சுற்றி மூன்று சீனியர் மாணவர்கள் அமர்ந்து கொண்டு மது அருந்த கட்டாயப்படுத்தி கடுமையாக தாக்குகின்றனர். உதைப்பதும் பெல்ட் கொண்டு அடிப்பதும் என மாணவரை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனை அதே அறையில் இருந்த ஒருவர் காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆன நிலையில் ராகிங் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பகர் பல்கலைக்கழகம் தரப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.