அமெரிக்காவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாகுபாடு இல்லாத இந்தியா உருவாகும்போது இட ஒதுக்கிடை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் சிந்திக்கும் என கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும் தேச விரோத கருத்துக்களை தெரிவிப்பதும் வாடிக்கையாக்கிவிட்டது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் தேச விரோத மற்றும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதாக இருந்தாலும், வெளிநாட்டு தலங்களில் இந்தியாவிற்கு எதிரான அறிக்கைகள் செய்வதாக இருந்தாலும் அவர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்து உணர்வுகளை காயப்படுத்துகிறார். ராகுல் காந்தியின் அறிக்கை பிராந்தியவாதம் மதம் மற்றும் மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும்.

அந்த கட்சியின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது. ராகுல் காந்தி நாட்டின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பேசி அதற்கு தான் எதிராக இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். கடைசியாக அவரது மனதில் இருந்த எண்ணங்கள் வார்த்தைகளாக வந்துவிட்டது. பாஜகவினர் இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவும் நாட்டின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவும் முடியாது என்பதை ராகுல் காந்திக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.