தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தின் அருகில் ஒரு வீடு உள்ளது. இந்நிலையில் சின்னூரை சேர்ந்த சிலர் தோட்ட வேலை செய்த, பிறகு அந்த வீட்டிற்குள் சிறிது நேரம் ஓய்வு எடுப்பது அல்லது அந்த வீட்டிற்குள் அமர்ந்து சாப்பிடுவதும் உண்டு.  இந்நிலையில் திடீரென்று தோட்டத்திலிருந்து வந்த நாக பாம்பு அந்த வீட்டிற்குள் புகுந்தது.

அதனை தேடி தோட்ட வேலைக்காரர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அந்த பாம்பு சீலிங் ஃபேனில் படம் எடுத்து ஆடியுள்ளது. அந்த பாம்பு 6 அடி நீளம் கொண்டது என்றும்,அது கோதுமை நாகப்பாம்பு என்று கூறினர். இந்நிலையில் அந்தத் தோட்ட வேலைக்காரர்கள் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் கண்ணன் அதனை மீட்டு வனப்பகுதிக்குள் பத்திரமாக விட்டனர்.