தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவரும் காமெடி நடிகருமான வடிவேலும் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இவர்களின் கூட்டணியை சக்சஸ் கூட்டணி என்றும் கூறப்படும்.

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு  காரணமாக 15 ஆண்டுகள் எந்தத் திரைப்படத்திலும் இணையாமல் இருந்து வந்த நிலையில் இத்திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‘கேங்கர்ஸ்’ என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது.

வடிவேலுவின் பிறந்த நாளில் திரைப்படத்தின் டைட்டிலுடன் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.