இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களது கற்பனைக்கு ஏற்ப உடைகளை வடிவமைத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மாடலிங் பெண் ஒருவர் மீன்களையே உடையாக வடிவமைத்து, மீன்களை வைத்து நெக்லஸ் மற்றும் கைப்பை போலவும் தயாரித்து அதனை அணிந்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

இவர் நூற்றுக்கணக்கான மீன்களை நூல்களில் கோர்த்து அதனை உடையாக அணிந்து சாலையில் “பேஷன் ஷோ” போல நடந்து வரும் வீடியோ தற்போது  வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது நெட்டிசன்களிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதற்கு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதுவரையிலும் இந்த வீடியோ 51 லட்சம் பேரால் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.