தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ராதிகா சரத்குமார் ரஜினி, கமலஹாசன், விஜயகாந்த், என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களையும் அளித்துள்ளார். இவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைவராலும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். இவர்  சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் ராதிகா தனியாகவோ அல்லது குடும்பத்தினருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்துள்ளார்.

அதன் அடிப்படையில் லண்டன் சென்ற ராதிகா பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் போது விமானத்தில் வைத்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சந்தித்து அவருடன் செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “விளையாட்டுத் திறமையினால் நம் நாட்டை பெருமைப்பட வைத்த விராட் கோலி மில்லியன் கணக்கான மக்களின் நெஞ்சங்களில் இருந்து வருவதாகவும், அவருடன் பயணித்தது மிக்க மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.