
அமெரிக்கா அதிபர் தேர்தலில் டெனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இவர்கள் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் உள்ள ஏ.பி.சி செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த விவாத நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்துள்ளது. அதில் முக்கியமான பல பிரச்சனைகளை பற்றி காரசாரமாக விவாதித்துள்ளனர். ரெனால்ட் ட்ரம்ப் 2017 முதல் 2021 வரை அதிபராக இருந்தபோது குடியேற்றம் மீதான கடின கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இந்நிலையில் கமலா ஹாரிஸ் உடன் நடந்த விவாதத்திலும் குடியேற்றவாசிகள் மீது உள்ள வெறுப்பு வெளிப்பட்டு உள்ளது.
அதில் ஓஹியா மாகாணத்தில் உள்ள ஸ்ப்ரிங்பில்ட் பகுதியில் உள்ள குடியேற்றவாசிகள் அதாவது வேறு நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு உள்ளே வருபவர்கள் மக்களின் வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிடுகின்றனர் எனவும் பேசியுள்ளார். இவரின் விவாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் இவர் வதந்திகளை பரப்பி வருகிறார் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
THEY’RE EATING THE DOGS pic.twitter.com/lQqMW5l8pT
— Tarquin 🇺🇦 (@Tarquin_Helmet) September 11, 2024
“>
இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் பேசியதை தன் உரிமையாளருடன் பார்த்துக் கொண்டிருந்த கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தது. அதனை உரிமையாளர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வந்த நிலையில் நாயின் ரியாக்ஷனை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் ட்ரம்பை தாக்கி தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் வெள்ளை மாளிகையும் கண்டன அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.