டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் பசு ஒன்று புதிதாக கன்று குட்டியை ஈன்றுள்ளது. இது தொடர்பான வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி வீட்டுக்கு புதிதாக வந்த கன்று குட்டிக்கு மாலை அணிவித்தும் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்.

அதன் பிறகு அந்த கன்று குட்டிக்கு தீப் ஜோதி என்ற பெயரிட்டுள்ளார். பசுக்கள் நம்முடைய எல்லா மகிழ்ச்சிக்கும் ஆதாரமானவை என நம்முடைய சாத்திரங்களில் கூறப்பட்டதாக பிரதமர் பதிவிட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடி கன்றுக்குட்டியை கொஞ்சம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் வீடியோவில் வைரலாகி வருகிறது.