
ஜியோ நிறுவனம் ஜியோ போன் பிரிமா 2 என்ற புதிய வகை செல்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த செல்போன் பார்ப்பதற்கு பேசிக் மாடல் போல் தோன்றியதால் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதில் மூன்றாவது செயலியின் உதவி இன்றி வீடியோ கால் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போன் 4g சேவை இருக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதில் youtube, facebook, google போன்ற வசதிகளையும் ஜியோ டிவி, ஜியோ சாவன், ஜியோ நியூஸ், ஜியோ சினிமா போன்ற வசதிகளையும் உள்ளடக்கி உள்ளது. மேலும் இந்த ஜியோ பே மூலம் பணவரத்தினை வர்த்தனைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். ஜியோ சாட் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவது குரூப் சாட் செய்வது என பல நிலைகளில் பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போன் போன்றே இதிலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
அதேபோல் ஜியோ ஸ்டோரில் இருந்து பல்வேறு செயலிகளை தரவிறக்கம் செய்யவும் உதவியாக இருக்கும். இந்த வடிவமைப்பு பார்ப்பதற்கு அழகாகவும் இதன் பட்டன்கள் மிருதுவாகவும் உபயோகத்திற்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. மேலும் ஜியோ போன் பிரியமா 2வில் டிஜிட்டல் செல்ஃபி கேமரா மற்றும் ப்ளூடூத் wi-fi வசதிகளையும் உள்ளடக்கி உள்ளது. 22 இந்திய மொழிகளை பயன்படுத்தும் வகையில் இந்த செல்போன் உருவாக்கப்பட்டுள்ளது.