இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில் மோர் ஆகியோர் கடந்த மாதம் விண்வெளிக்கு சென்ற நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் 2025 ஆம் ஆண்டு பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. இதற்கிடையில் வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விரும்புகிறார்கள்.

இதன் காரணமாக அவர்கள் விண்வெளியில் இருந்தபடியே வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவர்களுக்கு pdf வடிவில் நாசா வாக்களிப்பதற்கான படிவத்தை அனுப்பும். அவர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ அதனை அதில் பதிவு செய்யலாம். அது மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் கடந்த 1997 ஆம் ஆண்டு டேவிட் வுல்ப் விண்வெளியில் இருந்து முதல் முறையாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.