
பெங்களூர் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழக (BMTC) பேருந்தில் நடத்துனர் ஒருவர் பெண் இருக்கையின் கைப்பிடியில் அமர்ந்துள்ளார். அந்த பெண்ணும் எதுவும் சொல்லாமல் தனது செல்போனை பயன்படுத்துகிறார். இதனை சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதோடு இதற்கு பலரும் விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். சிலர் நடத்துனர் தன் இறக்கையை தேர்ந்தெடுத்து அமர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு பதில் அளித்த சிலர், நடத்துனர் தவறான நோக்கம் இல்லாமல் அமர்ந்திருந்ததாக கூறினர்.
View this post on Instagram