உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில் கேரேஜ் ஒன்றுள்ளது. அந்த கேரேஜில் பழுதடைந்த காரின் என்ஜினை மெக்கானிக் ஒருவர் திறந்துள்ளார். அப்போது அதற்குள் ஒரு 7 அடி பாம்பு பதுங்கி இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மெக்கானிக் அந்த கேரேஜின் உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

உடனே அந்த உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் என்ஜின் அடியில் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் விட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.