
குமரி மாவட்டம் குற்றியாறு பகுதியில் செல்வம் மற்றும் தவமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இத்தம்பதியினருக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் இளைய மகள் அபிநயா பிளஸ் டூ படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அபிநயா அவரது தோழி ஒருவருடன் நேற்று தொட்டி பாலத்திற்கு சென்றுள்ளார். அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தபோது அபிநயாதனது நெருங்கிய தோழி ஒருவருடன் செல்போனில் பேசி உள்ளார்.
அப்போது அபிநயாவுக்கும் அவரது தோழிக்கும் திடீரென சண்டை ஏற்பட்டது. அப்போது அபிநயா 70 அடி பள்ளத்தில் இருந்து திடீரென குதித்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அபிநயாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா உயிரிழந்தார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.