உத்தரப்பிரதேச மாநிலம் பைகேடா கிராமத்தில் சுந்தர், மீனா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், டிவிஎஸ், அப்பாச்சி பைக் மற்றும் 3 லட்சம் வரதட்சணையாக வேண்டும் என்று சுந்தர், மீனாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார். மீனா, சுந்தரின் கோரிக்கைகளை நிறைவேற்ற பலமுறை முயன்றும் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் சுந்தர் அவரை கடுமையாக துன்புறுத்தியுள்ளார்.

ரக்ஷாபந்தன் பண்டிகையை தொடர்ந்து மீனா தனது தந்தையின் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு, சுந்தர் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து வந்து மீண்டும் வரதட்சனை கொடுமை செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த சுந்தர், மீனாவை கட்டையால் தாக்கி கழுத்தை நெறித்துக் கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு காவல்துறையினர் தலைமுறைவாக இருக்கும் சுந்தரை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் மீனாவின் குடும்பத்தினர் சுந்தர் மற்றும் அவரது தாய், சகோதரி மற்றும் நான்கு கூட்டாளிகள் உட்பட பலர் கொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.